இயேசுவின் திரு இரத்தத்தின் மன்றாட்டு மாலை.
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ளகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
என்றும் வாழும் தந்தையின் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மனிதனாய்ப் பிறந்த இறைவாக்காகிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
புதிய, முடிவில்லா உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
வியர்வையாகத் தரையில் வழிந்தோடிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டபோது சிந்திய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முள்முடி சூட்டியபோது வெளியான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
சிலுவையில்; சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எங்கள் மீட்பின் விலையான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பாவமன்னிப்புக்கு இன்றியமையாத கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
நற்கருணையில் அருந்தப்படுவதும், ஆன்மாக்களைக் கழுவித்துடைப்பதுமான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இரக்கம் ஆறாகப் பெருகும்; கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பிசாசை வென்ற கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மறைச்சாட்சியருக்குத் திடமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இறையடியார்க்குப் பலமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
கன்னியர்களுக்கு வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஆபத்தில் தவிப்போர்க்கு உதவும் கிறிஸ்துவின் இரத்தமே,,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
துன்புறுவோரின் துயர்துடைக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
அழுகையில் ஆறுதல் அளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மனம் வருந்துவோரின் நம்பிக்கையான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இறப்போருக்கு மனநிறைவளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உள்ளங்களுக்கு அமைதியும் இனிமையுமான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முடிவில்லா வாழ்வின் பிணையான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உத்தரிக்கிற நிலையிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
மதிப்புக்கெல்லாம் உரிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
முதல்வர் - ஆண்டவரே, உமது இரத்தத்தால் எம்மை மீட்டீர்.
துணைவர் - இறைவனுடைய அரசாக எங்களை அமைத்தீர்.
செபிப்போமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய ஒரே மகனை உலக மீட்பராக ஏற்படுத்தி, அவரது இரத்தத்தைப் பாவக் கழுவாயாகய ஏற்கத் திருவுளமானீரே. எங்கள் மீட்பின் வலையாகிய அந்தத் திரு இரத்தத்தை வணங்கி தொழுகிறோம். அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து எங்களைப் பாதுகாத்து விண்ணக வாழ்வை நாங்கள் பெற்று மகிழ அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
No comments:
Post a Comment